வேலூர் மாங்காய் மண்டியில் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்வாயில் செல்லும் கழிவுநீர் அங்கு தேங்கி சகதியாக கிடக்கிறது. அதுபோக அழுகிய பழங்கள் கிடப்பதால் துர்நாற்றம் வீசி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்கள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்ற முன் வர வேண்டும்.
-பழனிவேல், வேலூர்.