இடையூறாக உள்ள கட்டிட கழிவுகள்

Update: 2022-07-25 14:57 GMT

இடையூறாக உள்ள கட்டிட கழிவுகள்

திருப்பூரில் செயல்பட்டு வரும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பள்ளியில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். மாணவிகளை அவர்களது பெற்றோர் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்துவிடுகிறார்கள். பலர் நடந்தும் வருகிறார்கள். ஆனால் பள்ளிக்கூடம் முன்பு கட்டிட கழிவுகள் அதிகளவில் கிடக்கிறது. இவை அகற்றப்படாமல் உள்ளதால் காலை மாலை நேரங்களில் பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

வின்சென்ட். ராயபுரம். 95008 17499

மேலும் செய்திகள்