திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியில் பள்ளியின் அருகில் குப்பைத்தொட்டி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைத்தொட்டியை சரியான முறையில் வைத்து குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் திருப்பத்தூர் அருகே காக்கங்கரையில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் பயனற்ற முறையில் குப்பைத்தொட்டி உள்ளது. இந்தக் குப்பைத்தொட்டியை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வைத்து குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசன், திருப்பத்தூர்.