வேலூர் சத்துவாச்சாரி அரசு கேபிள் டி.வி. அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாயவன் வேலூர்