வேலூரை அடுத்த செதுவாலை-ராமாபுரம் சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து மர்மநபர்கள் தீவைக்கின்றனர். இதனால் அங்கு புகை மூட்டம் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகாலிங்கம், செதுவாலை.