குப்பை கழிவுகளை கொட்டும் அவலம்

Update: 2025-05-25 20:21 GMT

வந்தவாசி தாலுகா அலுவலகம், தெற்கு போலீஸ் நிலையம் அருகில் அழுகிய காய்கறிகள், குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அங்கு வரும் பன்றிகள், மாடுகள் குப்பைகளை கிளறிவிட்டு கழிவுகளை சாப்பிடுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தால் தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கும், அங்குப் பணியாற்றுவோருக்கும் சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

-வங்கை அகிலன், சமூக ஆர்வலர், வங்காரம்.

மேலும் செய்திகள்