ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரம் பகுதியில் கண்ணன்குளம் உள்ளது. அந்தக் குளத்தை சுற்றிலும் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் குளத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கிடக்கின்றன. அவை நீரில் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு ஒவ்வாமை, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. காவேரிப்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம் குளத்தை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமா?
-எம்.மோகன், கொண்டாபுரம்.