குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்

Update: 2022-07-13 17:09 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் என தனித்தனியாக பிரித்து சேகரித்து செல்கின்றனர். அந்த குப்பைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் நச்சுப்புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-ரா.இளவரசன், விளாப்பாக்கம்.

மேலும் செய்திகள்