வேலூர் அருகே சதுப்பேரி கரை பைபாஸ் சாலை ஓரம் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை மூட்டைகளாக கட்டி சாலையோரத்தில் வீசி செல்கின்றனர். கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. ஏரிக்கரையை கடக்கும் வரை பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். சுகாதாரத்தைக் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்பாபு, வேலூர்.