ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் குறுக்குப் பாதையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராட்டினமங்கலம் பிரதான சாலையின் அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகள், கழிவுப்பொருட்களை கொண்டு வந்து இங்கே கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தட்சிணாமூர்த்தி, ஆரணி.