அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பு குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்தக் குப்பைகளை ஆடுகள், மாடுகள், நாய்கள் உண்பதற்கு சாலையை கடந்து வருவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மருத்துவமனை முன்பு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை எதிரே சுப்பராயன் தெருவில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். அங்கு சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.
-ராமன், அரக்கோணம்.