குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-05-31 17:52 GMT

வந்தவாசியில் 19-வது வார்டு சன்னதி தெரு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அழுகிய தக்காளி போன்ற துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுப்பொருட்களை கொண்டு வந்து கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தக் குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-எஸ்.எம்.ஆனந்தன், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்