நச்சுப்புகையால் சுவாச பிரச்சினை

Update: 2025-03-09 19:51 GMT

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கிராமத்தில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஏரி பகுதியில் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்தக் குப்பைகளுக்கு யாரோ தீ வைத்து விடுவதால் பற்றி எரிகிறது. அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-அருண்குமார், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்