திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இளங்கோ நகர் பிரதான சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இப்பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் முறையாகக் குப்பைகளை அகற்றுவதில்லை. சாலையோரம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை ஆடு, மாடுகள் கிளறிச் சாலையில் பரப்பி விடுவதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.