மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அடிவாரம் பகுதியில் யானைகள் சாலையை கடக்கும் இடம் உள்ளது. இங்கு அந்த வழியாக செல்பவர்கள் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் உடைந்து கிடக்கும் மது பாட்டில்களால் யானைகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை வனவிலங்குகள் தின்று உடல் நலம் பாதிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.