ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் இதில் எழும் கடும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தப்படுமா?