பொது இடங்களில் தேங்கும் குப்பைகள்

Update: 2026-09-06 10:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முக்கண்ணாமலைப்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில் வீதிகளிலும், பொது இடங்களிலும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடப்பதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் சங்கரம்குளம் சாலை ஓரத்தில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்றி தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்