சுகாதார சீர்கேடு

Update: 2026-08-02 07:24 GMT

 கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குகுண்டல் ராமசாமி நாடார் சாலை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் வருவதில்லை. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், சீராக வீடுகளை குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அந்தோணிராஜ், வடக்கு குண்டல்.

மேலும் செய்திகள்