பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி 4-வது வார்டு பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் தெருவோரத்தில் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக தெருவோரத்தில் குப்பைகள் குவிந்துகொண்டே செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை விரைந்து அகற்றுவதுடன் குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.