மத்தூர் பஸ் நிலையத்தையொட்டி சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையில் தற்போது தண்ணீர் வற்றி காணப்படுவதால் இறைச்சி கழிவுகளும், குப்பை கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மாறி உள்ளது. தினந்தோறும் இவ்வாறு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மத்தூர் சின்ன ஏரியை சுற்றி குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.