நோய் பரவும் அபாயம்

Update: 2026-06-07 15:14 GMT

கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். நகர் பிரிவு சாலை அருகில் கழிவு, குப்பை மூட்டைகள் வீசப்படுகின்றன. இதில் இருந்து வெளியேறும் கடுமையான துர்நாற்றத்தால், அந்த பகுதி வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் தேங்கி வரும் இந்த கழிவுகள் மழையிலும், வெயிலிலும் மக்கி, அப்பகுதி முழுவதையும் துர்நாற்றக் காடாக மாற்றியுள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத் துறையினர் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்