அரியலூர் மாவட்டம் குறிஞ்சான் குளத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை சாலையோரம் கொண்டு வந்து போட்டுச் செல்கின்றனர். இதனால் சாலை முழுவதும் குப்பை கூளம் போல் காட்சியளிக்கிறது. மேலும், தெருநாய்கள், பன்றிகள் உள்ளிட்டவை இந்த குப்பைகளை கிளறுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.