கோவை லங்கா கார்னரில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையின் அடியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதற்கு ஆங்காங்கே கான்கிரீட் சிலாப் மூலம் மூடி அமைத்து உள்ளனர். சில இடங்களில் கான்கிரீட் சிலாப் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கால்வாயில் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அங்கு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.