கோவை ஒலம்பஸ் சர்ச் ரோட்டில் ஏராளமான குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் கால்வாயில் தேங்கியிருந்த மண், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாலையோரத்தில் குவித்து வைத்தனர். தற்போது கால்வாயில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி சென்றாலும், சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.