திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்பரவும் அபாயமும் உள்ளது. மேலும் கால்நடைகளும் இந்த குப்பைகளை உண்ணுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைத்தொட்டி அமைக்கவேண்டும்.