குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2026-05-31 10:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அவ்வழியே பயணிக்கும் நடைபாதையினர் மற்றும் வாகன ஓட்டிகள் இதில் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகள் தேங்குவதை தடுக்கவும், அவ்வப்போது தூர்வாரவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்