மலைபோல் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-05-31 10:45 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி நேதாஜி நகர், அருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அள்ளப்படாமல் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால், குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. காற்றடிக்கும் போது குப்பைகள் பறந்து இங்குள்ள வீடுகளுக்குள் வருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுத்து தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்