ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 3-வது வீதியில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டன. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதன் காரணமாக நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.