திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு பர்மா காலனி பகுதியில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டும் அவல நிலை உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே பர்மா காலனி பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.