விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதனால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.