குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2026-05-17 15:54 GMT
பண்ருட்டி- சென்னை மேம்பாலத்தின் அருகே சாலையோரமாக அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்தபடி செல்வதையும் காணமுடிகிறது. பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்