சேலம் ரத்தினசாமிபுரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலை முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் முகம் சுளித்தப்படி செல்கின்றனர். எனவே இப்பகுதியில் அதிகளவில் குப்பை தொட்டிகள் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.