கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசி சென்றுள்ளனர். இதை குரங்குகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் எடுத்து சாப்பிடுவதால் உடல் நலனுக்கு கேடு ஏற்படுகிறது. மேலும் பசுமையான வனப்பகுதி குப்பைத்தொட்டியாக மாறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் எடுத்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.