நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஏரியில் அதிகளவு கோழி கழிவுகளை மர்மநபர்கள் கொட்டி செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதுடன் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் மற்றும் கோழிகள் இறக்கக்கூடிய பல நோய்கள் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு ஏரியில் இறந்த கோழிகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.