திருவள்ளூர் மாவட்டம், மோரை ஊராட்சி சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் போதுமான குப்பை தொட்டிகள் இல்லாததால் மக்கள் குப்பைகளை சாலைகளின் ஓரத்தில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு உண்டாகிறது. மேலும் கால்நடைகளும் இந்த குப்பைகளை உண்பதால் நோய்வாய்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதுமான குப்பைதொட்டிகள் அமைக்கவேண்டும்.