ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் மூலம் எழும் துர்நாற்றத்தால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே குப்பைகளை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?