ஈரோடு கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. பொதுமக்கள் அந்த வழியாக மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.