மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த மேலக்கோவில்குடி கிராமத்தில் உள்ள ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றத்தால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.