புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றை குடியிருப்பு பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.