குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-05-10 11:16 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட முனியங்குறிச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சுடுகாடு செல்லும் வழியில் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது . இதில் இங்கு சுற்றித்திரியும் எண்ணற்ற பன்றிகள் மேய்வதால் குப்பைகள் சிதறி கிடக்கிறது . மேலும் துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்