கடும் துர்நாற்றம்

Update: 2026-05-10 10:24 GMT

சீரநாயக்கன்பாளையம் மின் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் இறைச்சி கழிவுகளும் கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்குள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நவடடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்