சிவகங்கை மாவட்டம் இளையான்குடி- கொங்கம்பட்டி செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு அதி அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அப்புறப்படுத்தவும், குப்பைகள் கொட்டுதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.