கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே மூத்தார் குளம் உள்ளது. இந்த குளத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் குளத்தின் சாலையோரமாக வீட்டில் உள்ள கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டிச் செல்கின்றனர். மேலும் அங்கு குப்பைகளை தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குளத்தின் தண்ணீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டுவதையும், தீவைத்து எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.