பழனி பஸ் நிலையத்தில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை அருகே பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை விரைந்து அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.