ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலையோரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதன் மூலம் எழும் துர்நாற்றத்தால் அவ்வழியே பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.