வெள்ளலூரில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதை ஒட்டி குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவை சரிந்து கால்வாயில் விழுந்து வருகிறது. இதனால் கால்வாயிலும் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு அதிகரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.