சுகாதார சீர்கேடு

Update: 2026-01-18 10:23 GMT

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுக்க வருகிறார்கள். தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

ராஜேஸ்வரி, திருப்பூர்.

மேலும் செய்திகள்