அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சி ஓசைப்பட்டியில் பாட்டப்பன் கோவில் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?