ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கழிவுகளை அகற்றி, அங்கு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.