நோய் பரவும் அபாயம்

Update: 2025-12-21 09:27 GMT

அவினாசி அருகே உள்ள பழங்கரை பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளான அவினாசிலிங்கம் பாளையம், குளத்துப்பாளையம், தேவம்பாளையம், பழங்கரை, பச்சாம்பாளையம் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குப்பைகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகை, காற்றின் திசைக்கேற்ப குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே குவிந்து கிடங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சிபி, அவினாசி.

மேலும் செய்திகள்